உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா விற்ற முதியவர் கைது

குட்கா விற்ற முதியவர் கைது

திருத்தணி,:ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் நகரி ஆகிய பகுதிகளில் இருந்து அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் திருத்தணிக்கு கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று திருத்தணி போலீசார் ரயில் நிலையம் அருகே சோதனை செய்த போது, அங்கு மறைவான இடத்தில் குட்கா பொருட்கள் விற்று வந்த வேலுார் மாவட்டம், காட்பாடி தாலுகாவை சேர்ந்த ராஜா, 70 என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விற்பனைக்கு வைத்திருந்த, 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 7 கிலோ குட்கா பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை