உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சோளிங்கர் ஒன்றிய கிராமங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு

சோளிங்கர் ஒன்றிய கிராமங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் எஸ்.வளர்மதி உத்தரவின் படி, ராணிப்பேட்டை மாவட்டம் முழுதும் மின்னணு ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாதிரி ஓட்டுச்சாவடி வாகனம் இயங்கி வருகிறது. சோளிங்கர் ஒன்றியம், வெங்குப்பட்டு, பரவத்துார், பாராஞ்சி, கூடலுார், ஜோதிபுரம் உள்ளிட்ட, 10 கிராமங்களில் நேற்று மாதிரி ஓட்டுச்சாவடி வாகனத்தின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திறந்தவெளி வாகனத்தில் இருந்த மின்னணு ஓட்டுப்பதிவு கருவியில், பகுதிவாசிகள் ஓட்டுப்பதிவு செய்து, நேரடி விளக்கம் பெற்றனர். பரவத்துார் பேருந்து நிறுத்தம், கூடலுார் - அரக்கோணம் நெடுஞ்சாலை உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளில் இந்த விழிப்புணர்வு வாகனம் முகாமிட்டு, பகுதிவாசிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ