மேலும் செய்திகள்
விதை பரிசோதனை முடிவை தாமதமின்றி வழங்க அறிவுரை
19-Dec-2024
திருவள்ளூர், விதை பரிசோதனை செய்து, தரமான விதையினை விவசாயிகள் பயிரிட வேண்டும் என, வேளாண் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்ட விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் சுகுணா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:விதைகளின் தரம் அறிந்து சாகுபடி செய்வதே சிறந்தது. பெரும்பாலான விவசாயிகள் முந்தைய விளைச்சலில் கிடைத்த விதைகளையே அடுத்த சாகுபடிக்கு பயன்படுத்துகின்றனர்.அத்தகைய விதைகளில் வீரியம் குறைந்த, நோய் தாக்குதலுக்கு உண்டான, உடைந்த விதைகள் இருக்கக்கூடும். இதனால், பயிரிட்டு முளைத்த சில நாட்களிலேயே கருகி விடும். விதை பரிசோதனை வாயிலாக மட்டுமே முளைப்புத்திறனை கண்டறிய முடியும்.தரமான விதைகளை பயன்படுத்தினால் தான், எதிர்பார்க்கும் மகசூலை விவசாயிகள் பெற முடியும்.எனவே, விவசாயிகள், தங்களிடம் உள்ள விதைகளை முளைப்புத்திறன், புறத்துாய்மை, ஈரப்பதம் குறித்து அறிந்து கொள்ள, திருவள்ளூர் பெரியகுப்பம், ஜே.என்.சாலையில் செயல்பட்டு வரும் விதை பரிசோதனை மையத்தை அணுகலாம்.தங்களிடம் உள்ள விதையில், 100 கிராம் அளவினை, காற்று புகாத பாலிதீன் பைகளில் கொண்டு வந்து, 80 ரூபாய் கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனை முடிவு, விவசாயிகளின் இருப்பிட முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
19-Dec-2024