உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வயலில் சாய்ந்த மின்கம்பங்கள் அகற்ற விவசாயிகள் கோரிக்கை

வயலில் சாய்ந்த மின்கம்பங்கள் அகற்ற விவசாயிகள் கோரிக்கை

பொன்னேரி: பொன்னேரி அடுத்த மெதுார் துணை மின்நிலையத்தில் இருந்து, திருப்பாலைவனம், போலாச்சியம்மன்குளம் வழியாக பழவேற்காடு பகுதிக்கு விளை நிலங்களில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.மழைக்காலங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுதால், அதை தவிர்க்க புதிய வழித்தடம் அமைக்கப்படுகிறது.இதற்காக பொன்னேரி - பழவேற்காடு நெடுஞ்சாலையை ஒட்டி புதிய மின்கம்பங்கள் பதிக்கப்பட்டு, அதில் மின்ஒயர்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இந்நிலையில், கடந்த மாதம், வீசிய 'மிக்ஜாம்' புயலின் போது ஆண்டார்மடம் போலாச்சியம்மன்குளம் பகுதிகளில் புதிய மின்வழித்தடத்திற்கான மின்கம்பங்கள் சாய்ந்தன. இவை, நெல் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் விழுந்து உள்ளன.புயல் வீசி ஒரு மாதம் ஆன நிலையில், மின்கம்பங்கள் சீரமைக்கப்படாமல் உள்ளன. இதனால் நெற்பயிர்கள் பாதித்து வருவதுடன், அறுவடை பணிகளிலும் சிரமம் ஏற்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.உடனடியாக அவற்றை சீரமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை