விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வரும் 31ம் தேதி வரை வாய்ப்பு
திருவள்ளூர்:காரீப் பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பால்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் பயிர் காப்பீட்டு திட்டம் 'அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா' என்ற காப்பீட்டு நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது. காரீப் பருவத்தில் நெல், கம்பு, உளுந்து, பச்சைப்பயிறு மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம். வரும் 31ம் தேதி காப்பீடு செய்வதற்கு கடைசி நாள். கடைசி நாளுக்கு முன்னதாகவே காப்பீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.