உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நந்தியாறு தரைப்பாலங்களில் வெள்ளம் 2வது நாளாக போக்குவரத்துக்கு தடை

நந்தியாறு தரைப்பாலங்களில் வெள்ளம் 2வது நாளாக போக்குவரத்துக்கு தடை

திருத்தணி:வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், நேற்று முன்தினம் அதிகாலை முதல், நேற்று அதிகாலை வரை திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், தொடர்ந்து கனமழை பெய்தது. மேலும், ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னை மற்றும் சோளிங்கர் ஆகிய ஏரிகள் நிரம்பி உபரிநீர் கடை வாசல் வழியாக நந்தியாற்றில் கலந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால் செருக்கனுார், மதுரா, சாமந்திபுரம் மற்றும் திருத்தணி - பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலை, எம்.ஜி.ஆர்.,நகர் ஆகிய பகுதிகளில் உள்ள நந்தியாறு தரைப்பாலங்கள் மீது நான்கு அடி உயரத்திற்கு மேல் நேற்று முன்தினம் தொடர்ந்து சென்று வருகிறது.இதனால், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டன. மேலும் தரைப்பாலம் வழியாக யாரும் கடக்கக் கூடாது என, போலீசார் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நேற்றும், தரைப்பாலங்கள் மீது வெள்ளம் செல்வதால், இரண்டாவது நாளாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனால் திருத்தணியில் இருந்து, பொதட்டூர்பேட்டை செல்லும் அனைத்து வாகனங்கள் கே.ஜி.கண்டிகை, அத்திமாஞ்சேரிபேட்டை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை