போட்டி தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு
திருவள்ளூர்:திருவள்ளூரில் குரூப் - 2, 2ஏ போட்டி தேர்வுக்கு, இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, பல்வேறு அரசு பணி போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் - 2, 2ஏ காலி பணியிடங்களுக்கான தேர்வு, வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான மாதிரி தேர்வுகள், இன்று மற்றும் வரும் 20ம் தேதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விருப்பமுள்ள போட்டி தேர்வர்கள், இன்று மாலைக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நேரிலோ அல்லது 044 - -2766 0250, 84898 66698 என்ற மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.