உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஆடு, மாடுகளின் குடிநீர் தொட்டி மின் மோட்டார் பழுது

 ஆடு, மாடுகளின் குடிநீர் தொட்டி மின் மோட்டார் பழுது

பள்ளிப்பட்டு: ஆடு, மாடுகளுக்கான குடிநீர் தொட்டிக்கு நீரேற்றும் மின்மோட்டார் பழுதடைந்துள்ளதை, சரி செய்ய வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிப்பட்டு ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது நாகிரெட்டிபள்ளி கிராமம். காப்புகாடுகளை ஒட்டிய இந்த கிராமத்தில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள், கால்நடைகளான ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள நொச்சிலி, பாத்தகுப்பம், கொத்தகுப்பம் மலைகளுக்கு ஓட்டி செல்கின்றனர். மேய்ச்சலில் இருந்து வீடு திரும்பும் கால்நடைகளின் தாகம் தீர்க்க, நாகிரெட்டி பள்ளி கிராமத்தில், கால்நடைகளுக்காக குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த குடிநீர் தொட்டிக்கு, மின்மோட்டார் மற்றும் ஆழ்துளை கிணறு வசதி உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த ஆழ்துளை கிணறில் இருந்து நீரேற்றும் மின்மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால், பகுதிமக்கள் குழாயில் இருந்து தண்ணீர் பிடித்து கால்நடை குடிநீர் தொட்டியை நிரப்பி வருகின்றனர். விரைந்து மின்மோட்டாரை சரி செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை