மேலும் செய்திகள்
மண் குவாரியில் பெண் தர்ணா வெங்கல் அருகே பரபரப்பு
10-Aug-2025
நரசிங்கபுரம்:நரசிங்கபுரத்தில் சவுடு மண் லாரிகளை சிறைபிடித்து, அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் ஏரியிலிருந்து, அரசு உத்தரவுப்படி சவுடு மண் அள்ளும் பணி, சில நாட்களுக்கு முன் துவங்கியது. சவுடு மண் ஏற்றிச் செல்லும் லாரிகள், சென்னை உட்பட பல பகுதிகளுக்கு செல்கின்றன. இதில், பேரம்பாக்கம் ஏரியிலிருந்து அள்ளப்படும் சவுடு மண், நரசிங்கபுரம் வழியாக காஞ்சிபுரம் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. குறுகலான சாலையில் அசுர வேகத்தில் லாரிகள் செல்வதால், இவ்வழியே பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் பகுதிமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், லாரியிலிருந்து பறக்கும் துாசிகள் மாணவர்களின் கண்களை பதம் பார்க்கிறது. இச்சாலை வழியே சவுடு மண் லாரிகளை இயக்க அனுமதிக்க கூடாது என, பகுதிமக்கள் மற்றும் அரசு பள்ளி மாணவ - மாணவியர் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி, லாரிகளை மறித்து, நேற்று காலை போராட்டம் நடத்தினர். தகவலறிந்து விரைந்து வந்த மப்பேடு போலீசார், 'நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தை அடுத்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
10-Aug-2025