உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 526 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

526 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், உள்ள 526 ஊராட்சிகளிலும், குடியரசு தினமான வரும், 26ல் கிராம சபை கூட்டம், காலை 11:00 மணியளவில் நடக்கிறது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், கொசு வாயிலாக பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் வாயிலாக, 2024- -25ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டம், துாய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தல் வேண்டும்.கிராம சபை கூட்டத்தில் பங்கேற்போர், கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி