மேலும் செய்திகள்
கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியவர் போலீசில் புகார்
8 minutes ago
வருவாய் மாவட்ட கால்பந்து அம்பத்துார் அரசு பள்ளி வெற்றி
8 minutes ago
பஞ்செட்டியில் பாலம் சேதம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
10 minutes ago
சோழவரம்: சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. தொடர் மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 10ம் தேதி 0.79 டி.எம்.சி., தண்ணீர் தேங்கியிருந்தது. ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்த நிலையில், கடந்த 11ம் தேதி முதல், சென்னையின் குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 200 கன அடி வீதம் புழல் ஏரிக்கு வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புழல் ஏரி மற்றும் கொசஸ்தலை ஆறு ஆகியவற்றிற்கு, விநாடிக்கு, 450 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. நீர்வளத்துறையினர் தொடர்ந்து சோழவரம் ஏரியை கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 minutes ago
8 minutes ago
10 minutes ago