உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழுதடைந்த கட்டடத்தில் இயங்கும் தோட்டக்கலை துறை அலுவலகம்

பழுதடைந்த கட்டடத்தில் இயங்கும் தோட்டக்கலை துறை அலுவலகம்

திருத்தணி:

திருத்தணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் பழுதடைந்த கட்டடத்தில் தோட்டக்கலை துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு ஒரே ஒரு சிறிய அறையில் அலுவலகம் இயங்கி வருவதால், போதிய அடிப்படை வசதிகள் இன்றி அலுவலர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

தோட்டக்கலை துறையின் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கும் பழம் மற்றும் காய்கறி விதைகள், மிளகாய், கத்திரிக்காய், தேங்காய் நாற்றுகள் போன்றவை வைப்பதற்கும் போதிய இடவசதி இல்லை. மேலும், அங்கு பணிபுரியும் நான்கு ஊழியர்கள் அமரக்கூட முடியாமல் தவித்து வருகின்றனர். இடவசதியில்லாததால், விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்கள் குறித்து ஆலோசனைகள் மற்றும் விளக்கம் அளிக்க முடிவதில்லை.பல ஆண்டுகளாக தோட்டக்கலை துறை அதிகாரிகள் தங்களுக்கு சொந்தமான கட்டடம் கட்டித்தர வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதம் எழுதியும், தற்போது வரை நடவடிக்கை இல்லை.தற்போதுள்ள கட்டடமும் விரிசல் ஏற்பட்டுள்ளதால், மழை பெய்தால் அலுவலகத்தில் ஊழியர்கள் அமர்ந்து வேலை செய்ய முடியாத நிலை தொடர்கிறது. காரணம் மழைநீர் ஒழுகுவதால் மழை பெய்யும் போது, தோட்டக்கலை அலுவலர்கள் அலுவலகத்திற்கு வருவதில்லை.எனவே, மாவட்ட கலெக்டர் இனியாவது தோட்டக்கலை துறைக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, விவசாயிகள் மற்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ