மேலும் செய்திகள்
சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு
11 hour(s) ago
100 நாள் வேலைக்கு கட்டிங் :கலெக்டர் அலுவலகத்தில் மனு
12 hour(s) ago
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
29-Dec-2025
இன்று இனிதாக திருவள்ளூர்
29-Dec-2025
பொன்னேரி:பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடந்தது. சப் - கலெக்டர் வாகே சங்கேத் பலவந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில் வருவாய், மீன்வளம், வேளாண், காவல், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பகுதிகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று, பல்வேறு கோரிக்கை குறித்து தெரிவித்தனர்.மேலும், ஏரிகளுக்கு வரும் வரத்து கால்வாய்களை துார்வார வேண்டும். விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பகுதிகளில் உள்ள நன்னீர் இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும். ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.கூட்டத்தில், விவசாயிகளிடம் இருந்து, 48 மனுக்கள் பெறப்பட்டன. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில், விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட, 52 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது.கூட்ட முடிவில், 'விவசாயிகள் நலன்காக்கும் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து உடனுக்குடன் பதில் அளிக்க வேண்டும். 'மனுதாரர்களுக்கு உரிய தகவல் தெரிவிக்க வேண்டும்' என அனைத்து துறை அலுவலர்களுக்கு சப்-கலெக்டர் அறிவுத்தினார்.
11 hour(s) ago
12 hour(s) ago
29-Dec-2025
29-Dec-2025