உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விபத்துகளை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்

விபத்துகளை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்

சோழவரம்:செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சோழவரம் அடுத்த நல்லுார் பகுதியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆய்வாளர் கருப்பையன் தலைமையில் நடந்தது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற லாரி, ஆட்டோ டிரைவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம், சாலை விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதுகுறித்து போக்குவரத்து ஆய்வாளர் கருப்பையன் கூறியதாவது:இந்தியாவில் மொத்த சாலைகளில், 3 சதவீதம் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தான் அதிக விபத்துகள் நடக்கின்றன. நாட்டின் மொத்த விபத்துகளின் எண்ணிக்கையில், 40 சதவீதம் தேசிய நெடுஞ்சாலைகளில் இடம்பெறுகிறது. இதற்கு காரணம், எந்த வழித்தடத்தில், எந்த வாகனம் செல்ல வேண்டும் என்பது குறித்து வாகன ஓட்டிகளிடையே சரியான விழிப்புணர்வு இல்லை.ஆறுவழிச் சாலைகளில் இடது ஓரம் உள்ள சாலையில், இருசக்கர வாகனங்கள், நடுவில் உள்ள சாலையில் ஆட்டோ முதல் லாரி வரை உள்ள வாகனங்கள் செல்ல வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், தங்களுக்கான பாதையில் பயணித்தால் விபத்துகளை முற்றிலும் தவிர்க்கலாம்.அதேபோல், இணைப்பு சாலையில் இருந்து பிரதான சாலைக்கு செல்பவர்கள், 'யு - டர்ன்' எடுப்பவர்கள் சாலை விதிகளை சரியாக பின்பற்றாமல் இருப்பதால், அங்கும் அதிக விபத்துகள் நேரிடுகிறது. எனவே, குறைந்த வேகம் மற்றும் கவனம் இருந்தால், விபத்துகளை தவிர்க்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை