உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூவலம்பேடு போலீஸ் பூத் முழு நேரம் செயல்படுமா?

பூவலம்பேடு போலீஸ் பூத் முழு நேரம் செயல்படுமா?

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர மாநிலம் சத்தியவேடு மற்றும் தமிழக பகுதியான கவரைப்பேட்டையை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பூவலம்பேடு பஜார் பகுதி. இரு மாநிலங்களை இணைக்கும் அந்த சாலையில் உள்ள, முக்கிய சந்திப்பு பகுதியாகும். அங்கிருந்து தேர்வாய் கண்டிகை சிப்காட் சாலை பிரிகிறது. மேலும், சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்லும் முக்கிய சந்தை பகுதியாகும்.அங்கிருந்து 12 கி.மீ., தொலைவில், பாதிரிவேடு போலீஸ் நிலையம் இருப்பதால், பூவலம்பேடு பஜார் பகுதியில், வங்கி அருகே நான்கு ஆண்டுகளுக்கு முன் 'போலீஸ் பூத்' திறக்கப்பட்டது. ஒரு சில தினங்கள் மட்டுமே செயல்பட்ட அந்த 'போலீஸ் பூத்', அதன் பின் முறையாக செயல்படவில்லை. எப்போதாவது திறக்கப்படுகிறது என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அதிக அளவில் மக்கள் கூடும் முக்கிய சந்திப்பு என்பதை கருத்தில் கொண்டு, பகுதியினர் பாதுகாப்பு கருதி, அந்த 'போலீஸ் பூத்'தை முழு நேரம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை