மேலும் செய்திகள்
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆய்வு
13-Mar-2025
திருத்தணி:திருத்தணி அரசு மருத்துவமனையில், தினமும் 1,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகளுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும், 120க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிப்பதில்லை என, புகார் வந்ததை தொடர்ந்து, நேற்று திருவள்ளூர் மாவட்ட இணை இயக்குனர் அம்பிகா அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு செய்தார்.அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள், புற நோயாளிகள் பிரிவு, ஆய்வகம் மற்றும் மருந்தகம் போன்ற இடங்களில் ஆய்வு செய்து, நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.பின், மருத்துவர்கள், செவிலியர்களிடம், நோயாளிகளிடம் கனிவாக பேசுங்கள். விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளிகளிடம் எவ்வித புகாரும் வரக்கூடாது என, அறிவுறுத்தினர்.
13-Mar-2025