உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவிலில் 21ல் கும்பாபிஷேகம்

திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவிலில் 21ல் கும்பாபிஷேகம்

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவிலுடன் இணைந்தது, திருவாலங்காடு பத்ரகாளியம்மன் மற்றும் வினைதீர்த்த விநாயகர் கோவில்.இக்கோவில்களில் நாளை மறுநாள் காலை 9:00 - 10:30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு கிராம தேவதை வழிபாடு நடந்தது. நேற்று மாலை 5:00 மணிக்கு பத்ரகாளியம்மன் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. இன்று காலை 8:30 மணிக்கு கணபதி பூஜை, கோ பூஜையும், மாலை 5:00 மணிக்கு முதல் யாகசாலை பூஜை நடைபெறும்.நாளை மறுநாள் காலை 5:00 மணிக்கு நான்காம் யாகசாலை பூஜையும், 9:00 மணிக்கு மேல் வினைதீர்த்த விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழாவும், 10:00 மணிக்கு மேல் பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கான ஏற்பாட்டை, திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி தலைமையிலான ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மாந்தீஸ்வரர் பூஜை ரத்து

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், வாரந்தோறும் சனிக்கிழமை மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடப்பது வழக்கம். இந்நிலையில், நாளை மறுநாள் பாலஸ்தாபனம் நடைபெற உள்ளதால், மார்ச் 29ம் தேதி வரையிலான 9 சனிக்கிழமைகளில் நடைபெறும் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மூலவர், அம்பாளை நாளை மறுநாள் முதல் பிப்., 20 வரை தரிசிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ