உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொழுநோய் கணக்கெடுப்பு பணி தீவிரம்

தொழுநோய் கணக்கெடுப்பு பணி தீவிரம்

ஆர்.கே.பேட்டை: ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தொழுநோய் குறித்த கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது. சுகாதார துறை சார்பில், ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில், இரண்டு வாரங் களுக்கு தொழுநோய் அறிகுறி குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, ஆர்.கே.பேட்டை வட்டார சுகாதார மையம் சார்பில், தற்போது கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இப்பணியில், தினமும் காலை 7:30 - 10:30 மணி வரை தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு நபர்களை கொண்ட ஒரு குழு, தினமும் 40 வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இந்த கணக்கெடுப்பின் படி, பாதிப்பு இருப்பதாக கண்டறியப்படும் நபர்களிடம், சிறப்பு சுகாதார ஆய்வாளர்கள் அடுத்தகட்டமாக பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். பரிசோதனையில் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், தொடர்ந்து சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை