உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நந்தியம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் மந்தகதியில் இணைப்பு சாலை பணிகள்

நந்தியம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் மந்தகதியில் இணைப்பு சாலை பணிகள்

மீஞ்சூர்: நந்தியம்பாக்கத்தில் - அத்திப்பட்டு ரயில்வே பாலம் அமைந்து, மூன்று வருடங்கள் முடிந்தும், அணுகு சாலை பணிகள் மந்தகதியில் நடக்கின்றன.சென்னை -- சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், அத்திப்பட்டு - நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, எல்.சி.,14 ரயில்வே கேட் உள்ளது.திறந்து மூடும் வகையில் உள்ள இந்த ரயில்வே கேட் வழியாக, நந்தியம்பாக்கம், கொள்ளட்டீ, தமிழ்கொரஞ்சூர், மவுத்தம்பேடு, செப்பாக்கம், கொரஞ்சூர் ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட, 20 கிராமங்களை சேர்ந்தவர்கள் கல்வி, மருத்துவம், தொழில் ஆகியவற்றிற்காக மீஞ்சூர், பொன்னேரி மற்றும் சென்னைக்கு சென்று வருகின்றனர்.இந்த ரயில் தடத்தில், தினமும் விரைவு, சரக்கு மற்றும் புறநகர் ரயில்கள் என, 200க்கும் அதிகமானவை சென்று வருவதால், பெரும்பாலான நேரம் ரயில்வே கேட் மூடியே இருக்கிறது. இதனால் கிராமவாசிகள் நீண்ட நேரம் ரயில்வே கேட்டில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.கிராமவாசிகளின் நீண்டகால கோரிக்கையை தொடர்ந்து, 2018ல், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், 36 கோடி ரூபாயில் இங்கு ரயில்வே பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே, ரயில்வே எல்லையில் துாண்கள் அமைத்து அதன் மீது ஓடுபாதை கட்டி முடிக்கப்பட்டது.பாலப்பணிகள் முடிந்து, மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், அதற்கு இருபுறமும் அணுகு சாலை அமைக்கப்படாமல் உள்ளது. கிராமவாசிகள் நீண்ட நேரம் ரயில்வே கேட்டில் காத்திருப்பதும் தொடர்கிறது.இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ரயில்வே கேட்டின் இடுக்குகளில் புகுந்து ஆபத்தான பயணத்தினை மேற்கொள்கின்றனர். மேற்கண்ட பாலத்திற்கு அணுகு சாலை அமைப்பதற்காக, நந்தியம்பாக்கம் கிராமத்தில், 7,433 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.கையகப்படுத்தப்பட்ட இடங்களில், 45 வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. இவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகள் மந்தகதியில் இருப்பதால் குடியிருப்புவாசிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.இது குறித்து நில எடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:அணுகு சாலைக்கு தேவையான நிலம் அளவீடு செய்யப்பட்டு, அதில் உள்ள வீடு, மரம் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. நிலம் வழங்குபவர்களுக்கு, இழப்பீடு தொகையும் கணக்கிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. விரைவில், குடியிருப்புவாசிகளுக்கு இழப்பீடு தொகை கிடைத்து விடும். அணுகு சாலைக்கான பணிகளும் தொடங்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி