உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண்ணுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றியவர் கைது

பெண்ணுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றியவர் கைது

கும்மிடிப்பூண்டி: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சவுரவ்ஜித், 27. கவரைப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலையில், 2023ம் ஆண்டு ஜூன் மாதம் வரை வேலை பார்த்தார். அப்போது, உடன் வேலை செய்த, கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்த, 25 வயது பெண் ஒருவரை காதலித்தார். திருமணம் செய்வதாக அவரிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பின்னர், அந்த பெண்ணை ஏமாற்றி தலைமறைவானார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில், கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, சவுரவ்ஜித்தை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார், ஆந்திர மாநிலம் நெல்லுார் அருகே சவுரவ்ஜித்தை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிந்த அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி