பெண்ணிடம் செயின் பறித்தவர் கைது
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த ஆரணியைச் சேர்ந்தவர் லட்சுமி, 65. இவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, லட்சுமியின் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர், அவரது கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறித்து விட்டு தப்பினார். இதுகுறித்து லட்சுமி, ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், ஆரணியைச் சேர்ந்த திக் விஜய், 27, என்பவரை கைது செய்து, தாலி செயினை பறிமுதல் செய்தனர்.