டீ குடித்தபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ஜாகீர்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிபாபு, 41. இவர் நேற்று காலை, 6:00 மணியளவில் வீட்டில் டீ குடித்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தவரை உறவினர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.