உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கோவிலில் மரத்தேர் வீதியுலா

திருத்தணி கோவிலில் மரத்தேர் வீதியுலா

திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த மாதம், 14ம் தேதி விநாயகர் வீதியுலாவுடன் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மலைக்கோவில் தேர்வீதியில் உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன், தினமும் ஒவ்வொரு வாகனத்தில் காலை, இரவு ஆகிய இரு வேளைகளில் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு உற்சவர் முருகர் மரத்தேரில் எழுந்தருளி, தேர்வீதியில் ஒருமுறை வலம் வந்து அருள்பாலித்தார்.இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி தேர் மீது தானிய வகைகளை வீசி வழிபட்டனர். நேற்று இரவு உற்சவர் முருகன் குதிரை வாகனத்தில் உலா வந்தார். நாளை தீர்த்தவாரி மற்றும் கொடி இறக்கத்துடன் மாசி மாத பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் மோகனன், உஷாரவி, சுரேஷ்பாபு மற்றும் நாகன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை