உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மொபைல் போன் பறிப்பு: போதை இளைஞர் கைது

மொபைல் போன் பறிப்பு: போதை இளைஞர் கைது

திருவாலங்காடு: சென்னை ---அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது திருவாலங்காடு ரயில் நிலையம்.இந்த ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை சென்னை நோக்கி சென்ற புறநகர் ரயிலில் இருந்து இறங்கி வீட்டிற்கு சென்ற பெண்ணிடம் மொபைல் போனை பறித்துக்கொண்டு போதை இளைஞர் ஒருவர் தப்பினார்.ரயில்வே கேட் அருகே போனை பறித்துச் சென்ற நபரை அப்பகுதிவாசிகள் பிடித்து அரக்கோணம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர் ஏகாட்டூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக், 22 என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள், பறிமுதல் செய்யப்பட்டன.அரக்கோணம் ரயில்வே போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி