உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீஞ்சூர் - செப்பாக்கம் சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மீஞ்சூர் - செப்பாக்கம் சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மீஞ்சூர்:மீஞ்சூரில் இருந்து புதுப்பேடு, தமிழ்கொரஞ்சூர், கொரஞ்சூர், ரெட்டிப்பாளையம், மவுத்தம்பேடு, செப்பாக்கம் வழியாக, அத்திப்பட்டு மற்றும் காட்டுப்பள்ளி பகுதிகளுக்கு செல்லும் மாவட்ட சாலை, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.சாலை முழுதும் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டும், சரளை கற்கள் பெயர்ந்தும் கிடப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.சாலை சேதம் அடைந்து இருப்பதால், மேற்கண்ட கிராமவாசிகள் அத்தியாவசிய தேவைகளுக்கு, மீஞ்சூர் சென்று வரும்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.மேலும், மீஞ்சூர், காட்டூர், நெய்தவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, காட்டுப்பள்ளி மற்றும் அத்திப்பட்டில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு பணிக்கு சென்று வரும் தொழிலாளர்கள், சாலை பள்ளங்களில் சிக்கி தவிக்கின்றனர்.வாகன ஓட்டிகளின் சிரமம் கருதி, மேற்கண்ட சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை