| ADDED : பிப் 22, 2024 01:11 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம், சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்த வலியுறுத்தி, கமிஷனர் மற்றும் பணியாளர்கள் வீடு மற்றும் கடைகளுக்கு நேரில் சென்று, நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.இதுவரை 10.61 கோடி ரூபாய் மட்டுமே வரி வசூல் ஆகியுள்ளது. மீதமுள்ள 6.43 கோடி ரூபாயை வசூலிக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.திருவள்ளூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நகராட்சிக்கு தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவைகளை உடனடியாக நகராட்சிக்கு நிலுவையின்றி செலுத்த வேண்டும். மேலும் http://tnurbanepay.tn.gov.inஎன்ற அரசு இணையம் வழியாக செலுத்தவும் வழிவகை செய்யபட்டுள்ளது. தவறினால், ஜப்தி நடவடிக்கை, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும் என, கமிஷனர் சுபாஷினி எச்சரித்துள்ளார்.