உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முட்டை வேண்டாம்... வாழைப்பழம் போதும் 1.42 லட்சத்தில் 271 மாணவர் மட்டும் தேர்வு

முட்டை வேண்டாம்... வாழைப்பழம் போதும் 1.42 லட்சத்தில் 271 மாணவர் மட்டும் தேர்வு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் முட்டையை நிராகரித்து, 271 பேர் மட்டும் வாழைப்பழம் உண்டு வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில், 1 - 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு, எம்.ஜி.ஆர்., சத்துணவு திடடத்தின் கீழ் மதிய சத்துணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.வாரத்தில் திங்கள் - வெள்ளி வரை வெஜிடபிள் பிரியாணி, சாம்பார், தக்காளி, புளி, எலுமிச்சை, கீரை உள்ளிட்ட கலவை சாதம், சாதம் மற்றும் சாம்பார் இவற்றுடன் உருளைக்கிழக்கு வறுவல், வேக வைத்த மற்றும் மசாலா, மிளகு முட்டை என, சத்தாண உணவு வழங்கப்பட்டு வருகிறது. முட்டை சாப்பிடாதோருக்கு, வாழைப்பழம் வழங்கப்படுகிறது.மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியம் மற்றும் ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர் நகராட்சி என, மொத்தம் 1,535 சத்துணவு மையங்கள், பள்ளிகளில் இயங்கி வருகின்றன. இவற்றில், பள்ளிகளில் பயிலும் 1,90,425 மாணவ - மாணவியரில், 1,42,832 பேர் மதிய சத்துணவு உட்கொள்கின்றனர். மேலும், 1,42,561 பேர் முட்டை உட்கொள்கின்றனர். மீதமுள்ள 271 பேர் மட்டுமே, வாழைப்பழம் உட்கொள்கின்றனர். அதுவும், அவர்கள் அனைவரும் புழல் ஒன்றியத்தில் மட்டுமே உள்ளனர் என்பது வியப்பிற்கு உரியதாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை