உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மீஞ்சூரின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க திட்டமிடல் இல்லை நீர்நிலைகளை பராமரிப்பதில் அதிகாரிகள் அலட்சியம்

 மீஞ்சூரின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க திட்டமிடல் இல்லை நீர்நிலைகளை பராமரிப்பதில் அதிகாரிகள் அலட்சியம்

மீஞ்சூர்: மீஞ்சூர் நகரின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க, எந்தவொரு திட்டமிடலும் இல்லாத நிலையில், பாழாகி வரும் நீர்நிலைகளையும் உரிய முறையில் பராமரிக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது, சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆழ்துளை கிணறு மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள, 10,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு, தினமும், 35 - 40 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் உவர்ப்பு காரணமாக, வன்னிபாக்ககம், சீமாவரம் ஆகிய பகுதி களில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் ஆழ்துளை கிணறு கள் அமைத்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இவற்றின் வாயிலாக, மீஞ்சூர் பகுதி குடியிருப்புகளுக்கு, தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. மக்க ளின் தேவையில், 50 சதவீதம் மட்டுமே பேரூராட்சி நிர்வாகத்தால் வழங்க முடிவதால் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், குடியிருப்பு மக்கள் டிராக்டர்களில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதையும், கேன்களில் அடைத்து விற்கப்படுவதையும், காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் கட்டாய நிலை உள்ளது. சென்னை புறநகரில் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக மீஞ்சூர் உள்ளது. இங்கு, நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தண்ணீர் தேவையும் அதிகரித்துள்ளது. அதே சமயம், மக்களின் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு, எந்தவொரு திட்டமிடலும் இல்லாதது, சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்திய ஏற்படுத்தி வருகிறது. மீஞ்சூர் சுற்றுவட்டார மக்கள் நலக்கூட்டமைப்பு செயலர் ஷேக் அகமது கூறியதாவது: கடந்தாண்டு பிப்., மாதம் சட்டசபை கூட்டத்தொடரின் போது, 'மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் இருந்து, தினமும் 40 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், அதேபோல் தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தில் இருந்து, புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும்' அறிவிக்கப்பட்டது. அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. காட்டுப்பள்ளி குடிநீர் ஆலையே முடங்கியுள்ளது. மீஞ்சூர் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கின்றன. வாய்ப்பு குறிப்பாக, நகரத்தின் மையத்தில் உள்ள ஏரியை ஆழமாக துார்வாரி, கொசஸ்தலை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து சேமித்து, சுத்திகரித்து வழங்க வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கான எந்தவொரு திட்டமிடலும் அரசிடம் இல்லை. இது, வேதனைக்குரியது. எதிர்காலத்தில் மீஞ்சூர் பகுதியில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன், உடனே ஆய்வுகளை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை