மேலும் செய்திகள்
மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது
01-Nov-2025
கும்மிடிப்பூண்டி: ஆந்திர மாநில மதுபாட்டில்களை கடத்திய, பீஹார் மாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்தில் இருந்து இறங்கிய நபர், நடந்தபடி சோதனைச்சாவடியை கடக்க முயன்றார். போலீசார் சோதனையிட்டபோது, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 40 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஆந்திர மதுபாட்டில்களை கடத்தியது, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் ராம், 36, என்பது தெரியவந்தது. இதுகுறித்து, வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
01-Nov-2025