உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா விற்பனை ஒடிசா நபர் கைது

கஞ்சா விற்பனை ஒடிசா நபர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் சக தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஒடிசா நபரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை வளாகத்திற்குள் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் மேற்கொண்ட சோதனையில், சக தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அசோக்குமார், 40, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை