உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  குளிர் காயும் போது மூதாட்டி தீக்காயம்

 குளிர் காயும் போது மூதாட்டி தீக்காயம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே குருவி அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லம்மாள், 75. தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு குளிர் அதிகமாக இருந்ததால், காகிதங்களை எரித்து குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அப்போது, அவர் அணிந்திருந்த ஆடை மீது தீப்பற்றியதால் பலத்த தீக்காயமடைந்தார். அறுபது சதவீத தீக்காயங்களுடன், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை