உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோவில் குளத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி

கோவில் குளத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி

கடம்பத்துார், கடம்பத்துார் ஊராட்சி கசவநல்லாத்துாரைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு, 40. சரக்கு வாகனத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று மதியம் இங்குள்ள ஏகாத்தம்மன் கோவில் குளத்தில் கால் கழுவ சென்றுள்ளார்.அப்போது, கால் இடறி கோவில் குளத்தில் தவறி விழுந்தார். இதையடுத்து பகுதிவாசிகள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த கடம்பத்துார் போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை