உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திறந்த நிலையில் மழைநீர் கால்வாய் ஏருசிவன் ஊராட்சியில் அவதி

திறந்த நிலையில் மழைநீர் கால்வாய் ஏருசிவன் ஊராட்சியில் அவதி

பொன்னேரி,மீஞ்சூர் ஒன்றியம், ஏருசிவன் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் கிராமம், பெருமாள்கோவில் தெருவில், 15வது நிதிக்குழு மானியத்தில், 4.39 லட்சம் ரூபாய் செலவில், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.குடியிருப்புகளை ஒட்டி அமைக்கப்பட்ட இந்த கால்வாய் திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.திறந்த நிலையில் உள்ள கால்வாயை கடக்கும்போது, தடுமாற்றம் அடைகின்றனர். குழந்தைகள், கால்வாயில் தவறி விழுந்து சிராய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்கின்றனர். கால்நடைகளும் சிரமத்திற்கு ஆளாகின்றன.இது குறித்து கிராமவாசிகள் தெரிவித்ததாவது:கால்வாய் அமைக்கும்போதே, மூடிபோட வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், மூடி அமைக்காமல் திறந்த நிலையில் விடப்பட்டு உள்ளது. ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்த கால்வாய் சரியான திட்டமிடல் இன்றி கட்டப்பட்டு உள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகளுக்கு எந்த பயனும் இல்லை. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்களே இதற்கான தீர்வை ஏற்படுத்துவோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ