உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் பாலவாக்கத்திற்கு நிழற்குடை அவசியம்

 பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் பாலவாக்கத்திற்கு நிழற்குடை அவசியம்

ஊத்துக்கோட்டை: பாலவாக்கம் கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அடுத்த, பாலவாக்கம் கிராமத்தில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்தல். மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகள், மாணவர்கள் மேனிலைப் பள்ளிக்கு செல்ல ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர். போக்குவரத்திற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நம்பி உள்ளனர். இங்குள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே இருந்த பயணியர் நிழற்குடை சிதிலமடைந்து காணப்பட்டதால், அவை சமீபத்தில் இடித்து அகற்றப்பட்டது. தற்போது நிழற்குடை இல்லாததால், பயணியர் வெயில், மழையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, கலெக்டர் பிரதாப் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலவாக்கம் கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ