உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  காலிமனையில் கழிவுநீர் தொற்று அபாயத்தில் மக்கள்

 காலிமனையில் கழிவுநீர் தொற்று அபாயத்தில் மக்கள்

வெங்கத்துார்: மணவாளநகரில் காலி மனைகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து குளம்போல் தேங்கியுள்ளதால், பகுதி மக்களுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது மணவாளநகர். இங்குள்ள ஒண்டிக்குப்பம் நவநீத நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கால்வாய் இல்லாததால் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அப்பகுதியில் காலி மனைகளில் தேங்கி உள்ளது. மேலும் தற்போது மழை பெய்து வரும் நிலையில் மழைநீரும் காலி மனைகளில் தேங்கியுள்ள கழிவுநீருடன் கலந்து குளம்போல் காட்சியளிப்பதால் அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பகுதி மக்களுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நவநீதன் நகர் பகுதியில் கால்வாய் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ