உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நசரத்பேட்டை நிழற்குடையை சுற்றி வளர்ந்துள்ள செடிகள்

நசரத்பேட்டை நிழற்குடையை சுற்றி வளர்ந்துள்ள செடிகள்

திருவள்ளூர், சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அடுத்துள்ளது நசரத்பேட்டை. இப்பகுதியில் உள்ள நிழற்குடையை பயன்படுத்தி நசரத்பேட்டை, வரதராஜபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் பணிக்கு செல்லும் பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இப்பகுதியில் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இணைப்பு சாலையில் நான்கு பயணியர் நிழற்குடைகள் உள்ளன. இந்த நிழற்குடைகள் போதிய பராமரிப்பு இல்லாததால் செடிகள் வளர்ந்து, விளம்பரங்கள் ஒட்டும் இடமாகவும், வாகனங்கள் நிறுத்துமிடமாகவும் மாறியுள்ளன.இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பகுதிவாசிகள், மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பயணியர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி