உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பயணிகள் நிழற்குடையின் மேல் தளத்தில் செடிகள்

பயணிகள் நிழற்குடையின் மேல் தளத்தில் செடிகள்

பள்ளிப்பட்டு:அரசு தொடக்கப்பள்ளி எதிரே உள்ள பயணிகள் நிழற்குடையின் மேல் தளத்தில் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் கட்டடம் வலுவிழந்து இடிந்து விடும் அபாய நிலை உள்ளது. பள்ளிப்பட்டு ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கொத்த கொல்ல குப்பம். கொத்த கொல்ல குப்பத்திலிருந்து அத்திமஞ்சேரிபேட்டை செல்லும் சாலையை ஒட்டி அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி எதிரே நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை கடந்த சில ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் சீரழிந்து வருகிறது. நிழற்குடை அருகே உள்ள அரச மரத்தின் சருகுகள் நிழற்குடையின் மேல் தளத்தில் குவிந்துள்ளது. இதை உரமாகக் கொண்டு ஏராளமான ஏராளமான செடிகளும் அதில் வளர்ந்துள்ளன. இந்த செடிகளால் நிழற்குடை வலுவிழந்து இடிந்து விழும் அபாய நிலை உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களும், பகுதிவாசிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர். நிழற்குடையை முறையாக சீரமைத்து பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை