| ADDED : நவ 26, 2025 05:08 AM
பொன்னேரி: தேசிய அளவில் நடந்த, வில்வித்தை போட்டியில் பொன்னேரி மாணவர் வெள்ளி பதக்கம் வென்றார். பொன்னேரி அடுத்த எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஜெயசந்திரன் - இந்துமதி தம்பதியின் மகன் முகுந்தன், 14. பஞ்செட்டி வேலம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பொன்னேரி தியான்சந்த் ஸ்பேர்ஸ் அகடமியில் வில்வித்தை பயிற்சி பெற்று பல்வேறு பதக்கங்களை பெற்று உள்ளார். கடந்த செப். 23ல், பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் நடந்த, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்று, இந்தியன் போ பிரிவில் தங்கம் வென்று, தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசியில், கடந்த, 21ல் நடந்த தேசிய அளவிலான போட்டியில், பங்கேற்ற முகுந்தன், வெள்ளி பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற முகுந்தனை பயிற்சியாளர்கள் பாராட்டினர்.