உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பலத்த மழையால் நள்ளிரவில் மின்தடை

பலத்த மழையால் நள்ளிரவில் மின்தடை

திருவள்ளூர்:திருவள்ளூரில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாத நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை, பலத்த மழை பெய்தது.நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி திருவள்ளூரில், 1.5 செ.மீட்டர் மழை பதிவாகியது. மரக்கிளை மற்றும் மின்ஒயர் அறுந்து விழுந்ததால், நள்ளிரவு 3:00 மணி முதல் நேற்று காலை 7:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அறுந்து விழுந்த மின்ஒயரை சரிசெய்ததும், மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ