உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊத்துக்கோட்டையில் மின்தடை குடிநீர் பற்றாக்குறையால் மறியல்

ஊத்துக்கோட்டையில் மின்தடை குடிநீர் பற்றாக்குறையால் மறியல்

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டையில் நேற்று முன்தினம் மதியம், திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், சாலையோரம் இருந்த மரங்கள் சாய்ந்தன. மின்கம்பங்கள் சேதமடைந்து, ஆங்காங்கே மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் சில பகுதிகளுக்கு, நள்ளிரவு 1:30 மணிக்கு மின் விநியோகம் செய்யப்பட்டது. மற்ற இடங்களில் அறுந்த மின்கம்பிகள் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.அம்பேத்கர் நகரில், நேற்று முன்தினம் மதியம் காற்று வீச துவங்கியதில் இருந்து மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபட்டது. நேற்று மாலை 4:00 மணிக்கு ஆத்திரமடைந்த அப்பகுதிவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். 'மின் விநியோகம் செய்ய பணிகள் நடந்து வருகிறது. விரைவில் நிலைமை சீரடையும்' எனக் கூறினர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை