உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஸ்ரீகிரண் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஸ்ரீகிரண் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருத்தணி: திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் பீகாக் மருத்துவமனை அமைந்துள்ளது. இதன் நிர்வாக இயக்குனர் ஸ்ரீகிரண், தன் அறக்கட்டளை வாயிலாக பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.அந்த வகையில், நேற்று திருத்தணி கமலா தியேட்டர் அருகே ஸ்ரீகிரண் அறக்கட்டளை மற்றும் திருவள்ளூர் மாற்றுத்திறனாளி நலச்சங்கம் ஆகியவை இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில், மாற்றுத்திறனாளி நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயவேல் தலைமை வகித்தார். பீகாக் மருத்துவமனை மற்றும் ஸ்ரீகிரண் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஸ்ரீகிரண் பங்கேற்று, 6 மூன்று சக்கர சைக்கிள், 55 பேருக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கினார். மேலும், மாதந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும் எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை