உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் ரயில்வே நிர்வாகம் திட்டவட்டம்

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் ரயில்வே நிர்வாகம் திட்டவட்டம்

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த, மத்திய ரயில்வே துறை சார்பில், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ரயில் நிலையத்தின் இரு புறத்திலும், 2.26 ஏக்கர் பரப்பு நிலத்தை தனியார் பலர் ஆக்கிரமித்துள்ளனர். கடைகள், வீடுகள், கோவில் என மொத்தம், 211 ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.நாளை, அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ள நிலையில், தெற்கு ரயில்வே மண்டல உதவி பொறியாளர் மோஹக் சுனேஜா தலைமையிலான குழுவினர், நேற்று கள ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய் துறையினர், போலீசார் சென்றனர். அப்போது, இடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என அங்கு இருப்பவர்களிடம் தெரிவித்தனர்.ஆக்கிரமிப்பாளர்கள் சார்பாக ஒன்றிய கவுன்சிலர்கள் மதன்மோகன், சீனிவாசன் ஆகியோர் பேச்சு நடத்தினர். கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்தில் நடந்த பேச்சில் , ஒரு வார காலம் அவகாசம் கேட்கப்பட்டது. ஏற்கனவே ஓராண்டு காலம் அவகாசம் வழங்கியதால், 31ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாற்றம் ஏதும் இல்லை என, ரயில்வே நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி