உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கிராம சேவை மையத்தில் இயங்கும் ரேஷன் கடை

 கிராம சேவை மையத்தில் இயங்கும் ரேஷன் கடை

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பே ட்டை ஒன்றியம் சகஸ்ரபத்மாபுரத்தில் அரசு பள்ளியை ஒட்டி, ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. ரேஷன் கடை கட்டடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்ததால், அருகில் உள்ள கிராம சேவை மைய கட்டடத்திற்கு, ரேஷன் கடை இடமாற்றம் செய்யப்பட்டது. ஊராட்சியின் பொது அலுவலக பணிகளை மேற்கொ ள்ளும் விதமாக கட்டப்பட்டுள்ள இந்த சேவை மைய கட்டடத்தில், அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் கேன்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதனால், கட்டடம் சேதமடையும் நிலை உள்ளது. எனவே, பழுதடைந்த ரே ஷன் கடையை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ