| ADDED : நவ 20, 2025 03:44 AM
பாரிமுனை: குற்றவாளி கூண்டில் நின்று, இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' வெளியிட்ட ரவுடி மற்றும் சிறுவனை, போலீசார் கைது செய்தனர். மண்ணடி , அங்கப்பன் நாயக்கன் தெருவை சேர்ந்தவர் பரத், 23. 'சி' பிரிவு குற்றவாளியான இவர், வழக்கு விசாரணைக்காக, நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். ' குற்றவாளி கூண்டில் நிற்பதை வீடியோ எடுக்க வேண்டும்' எனக்கூறி, அவரது நண்பரான 17 வயது சிறுவனையும் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அதன்படி, நீதிமன்ற நுழைவாயிலில் பரத் நடந்து வருவதையும், கூடுதல் நீதிமன்றத்தின் குற்றவாளி கூண்டில் நிற்பதையும், சிறு வன் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதன்பின், அந்த இரண்டு வீடி யோக்களையும் இணைத்து, அதனுடன் 'கானா' பாடலையும் சேர்த்து, இன்ஸ் டாகிராம் எனும் சமூக வலைதளத்தில், பரத் 'ரீல்ஸ்' வெளியிட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உயர் நீதிமன்ற போலீசார், தகவல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, பரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுவனை கைது செய்த போலீசார், கெல்லிஸி ல் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.