உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மழையால் சேதமான சாலையை சீரமைக்க கோரிக்கை

 மழையால் சேதமான சாலையை சீரமைக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதியில் பெய்த கனமழையில் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி பகுதியில், கடந்த 10 தினங்களாக தொடர் மழை பெய்தது. இதனால், தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில் மழை நீர் தேங்கியது. மழை நீர் தேங்கிய இடங்களில், சாலை சேதமடைந்து ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, ஓபுளாபுரம், பெத்திக்குப்பம் மேம்பாலம், சிப்காட் சந்திப்பு, புதுகும்மிடிப்பூண்டி சந்திப்பு மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் பலத்த சேதடைந்துள்ளன. அப்பகுதிகளை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்ல வேண்டியுள்ளது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக, சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ