மேலும் செய்திகள்
நிழற்குடை கவலைக்கிடம் வெங்கத்துார் பயணியர் அவதி
13-Nov-2024
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது மணவாளநகர்.இப்பகுதியில் , அன்பழகன் இரண்டாவது குறுக்குத் தெருவில் சாலை, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி சாலை சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் இப்பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகி்னறனர். பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அவசர மருத்துவ தேவைக்கு ஆம்புலன்ஸ் வருவதில் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த சம்பந்தப்பட்ட ஊராட்சி, ஒன்றிய, மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் இப்பகுதியில் ஆய்வு செய்து சாலை, கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டுமென மணவளாநகர் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13-Nov-2024