உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

திருவள்ளூர், துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு பாதுகாப்பு அரசாணை வெளியிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து வட்டங்களிலும், சான்றிதழ் வழங்கும் பணிக்கு புதிய துணை தாசில்தார் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்த, 13ல் மாவட்ட தலைநகரில் உண்ணாவிரத போராட்டம் நடந்த நிலையில், நேற்று அனைத்து அலுவலகங்களிலும், காத்திருப்பு போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் மணிகண்டன், மாவட்ட தலைவர் வெண்ணிலா தலைமை வகித்தனர். பொன்னேரி தாசில்தார் அலுவலக நுழைவாயிலில், நடந்த போராட்டத்தில், வருவாய்த் துறை அலுவலர்களின் பணியிறக்கம், பெயர் மாற்றம், விதி திருத்தம், அலுவலக உதவியாளர் காலி பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.வரும், 27 ம்தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் மற்றும் ஜாக்டோ - ஜியோ நடத்தும் போராட்டங்களிலும் முழுமையாக பங்கேற்போம் என தெரிவித்தனர். இந்த போராட்டத்தால், அலுவலகம் வெறிச்சோடி, பல்வேறு சான்றுகளை பெற முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை