மேலும் செய்திகள்
கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியவர் போலீசில் புகார்
14 minutes ago
லீக் கம் நாக் அவுட் கிரிக்கெட் அரினி சி.சி., அணி அசத்தல்
14 minutes ago
பஞ்செட்டியில் பாலம் சேதம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
16 minutes ago
சென்னை: சென்னை வருவாய் மாவட்ட அளவிலான மாணவியர் கால்பந்து போட்டியில், அம்பத்துார்பி.கே., அரசு மகளிர் பள்ளி வெற்றி பெற்று முதலிடத்தை கைப்பற்றியது. பள்ளிக்கல்வித்துறையின் குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள்நடக்கின்றன. அந்த வகையில், சென்னை வருவாய் மாவட்ட கால்பந்து போட்டி, திருவொற்றியூரில்நடந்தது. மாணவியருக்கான ஆட்டத்தில், 17 மற்றும் 19 வயது இருபிரிவிலும், தலா 23 அணிகள் பங்கேற்றன. அனைத்து போட்டிகள் முடிவில், 17 வயது பிரிவில், அம்பத்துார் அரசு மகளிர் பள்ளி முதலிடத்தையும், துரைப்பாக்கம் அரசு பள்ளி இரண்டாமிடத்தையும், புரசைவாக்கம் பெனிட்டிக் பள்ளி மூன்றாம் இடத்தையும் வென்றன. அதேபோல், 19 வயது பிரிவில், புரசைவாக்கம் பெனிட்டிக் பள்ளி முதலிடத்தையும், அம்பத்துார் பி.கே., அரசு பள்ளி இரண்டாமிடத்தையும், சோழிங்கநல்லுார் அரசு பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்தன. மற்ற போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
14 minutes ago
14 minutes ago
16 minutes ago