ஆற்று மணல் கடத்தல் டூ - வீலர் பறிமுதல்
திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்கண்டிகை கொசஸ்தலை ஆற்றில் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்துவதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி எஸ்.ஐ., சாரதி தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று, அதிகாலை 3:00 மணியளவில், குப்பம்கண்டிகை பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் இரண்டு கோணிப்பைகளில் மணல் கடத்தி கொண்டு வந்தவரை பிடிக்க முயன்றனர்.அந்த நபர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து, இருசக்கர வாகனம் மற்றும் மணலை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.