மேலும் செய்திகள்
நெற்களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
11-Apr-2025
உலர்களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
22-Mar-2025
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னகளக்காட்டூர் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், அறுவடை செய்யும் நெற்கதிர், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களில் இருந்து தானியங்களை பிரித்தெடுக்க, நெற்களம் இல்லாததால், தக்கோலம் ---- திருவாலங்காடு ரயில் நிலைய சாலையை நெற்களமாக மாற்றி உலர்த்தி வருகின்றனர்.இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சின்னகளக்காட்டூரில் நெற்களம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
11-Apr-2025
22-Mar-2025